பால் ரீதியிலான தாக்குதலைப் புரிந்து கொள்வது அதற்கேற்ப பதிலளிக்க நமக்கு உதவுகிறது.
பால் ரீதியிலான தாக்குதல் என்பது, ஒரு நபரை அசௌகரியமாக, அச்சுறுத்தப்படுவதாக அல்லது பயமுறுத்தப்படுவதாக உணரச்செய்கிற எந்தவொரு பால் ரீதியிலான அல்லது பால் ரீதியில்ஆக்கப்பட்டதோர் செயலேயாகும். அது, ஒரு நபர் விரும்பாதஅல்லது தேர்ந்தெடுக்காததோர் பழக்கவழக்கமேயாகும்.
பால் ரீதியிலான தாக்குதல் என்பது நம்பிக்கைத் துரோகமும், தனது உடலுக்கு என்ன நேர்கிறது என்பதை சொல்வதற்கு ஒவ்வொரு நபருக்கும் உள்ளதோர் உரிமையை மறுக்கும் செயலுமாகும். பால் ரீதியிலான தாக்குதல் என்பது, உரிமையையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதாகும்.
பால் ரீதியிலான தாக்குதலை, வயது நிரம்பியவர்கள் மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள், மற்றும் மற்ற அனைத்துப் பின்னணியங்களிலிருந்து வருகிறவர்களுக்கு எதிராகச் செய்ய முடியும்.
பால் ரீதியிலான தாக்குதல் என்பதை பால் ரீதியிலான துஷ்பிரயோகம் அல்லது பால் ரீதியிலான வன்முறை என்பதாகவும் சொல்ல முடியும். கற்பழிப்பு மற்றும் பால் ரீதியிலான துஷ்பிரயோகம் போன்ற, பால் ரீதியிலான தாக்குதலைக் குறிக்க உபயோகிக்கிற சொற்கள், அன்றாட உரையாடல்களில் உபயோகிக்கும் போது பொதுவான அர்த்தமும், குறிப்பிட்டதோர் பால் ரீதியிலான குற்றச் செயல்களைக் குறிக்க உபயோகிக்கும் போது குறிப்பானதோர் அர்த்தமுமாக இரு அர்த்தத்தையும் கொண்டுள்ளன. இந்த இணையதளத்தில், நாம் இத்தகைய சொற்களைப் பொதுவானதோர் வழியிலேயே உபயோகிக்கிறோம் மேலும் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறோம்.
பால் ரீதியிலான குற்றவியல் குற்றச் செயல் ஒன்று நடைபெற்றிருக்கிறது என்பதாக நீங்கள் நினைத்து, அது குறித்து புகார் தெரிவிக்க விரும்பினால், நீங்கள் அது குறித்து மேற்கொண்டும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் இதனை, உங்கள் பகுதியில் உள்ள பால் ரீதியிலான தாக்குதல் சேவையை [ஆங்கிலத்தில்], காவல்துறையினரை, உங்கள் மருத்துவரை அல்லது தனியார் வழக்கறிஞர் ஒருவரைத் தொடர்பு கொள்வதன் மூலம் செய்யலாம். நேரமும் ஒரு காரணியாக இருக்கலாம் மேலும் இச்சேவைகளால் உரிமைகள் மற்றும் கிடைக்கக் கூடிய வழிவகைகள் குறித்த தகவல்களை உங்களுக்கு வழங்க முடியும்.
பால் ரீதியிலான தாக்குதல் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்வது, ஒரு நண்பரோ, குடும்ப உறுப்பினரோ அல்லது வாடிக்கையாளரோ தாங்கள் அவ்வகையான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக உங்களிடம் தெரிவிக்கும் போது அதற்குத் தக்க விதத்தில் பதிலளிக்க நமக்கு உதவுகிறது. பின்வரும் பட்டியல், பால் ரீதியிலான தாக்குதலுக்கான சில உதாரணங்களைக் கொடுக்கிறது:
பால் ரீதியிலான வன்கொடுமை.
விரும்பத்தகாத வகையில் தொடுவது அல்லது முத்தமிடுவது.
பால் ரீதியிலான தாக்குதல் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான காரியங்கள் இதோ:
பெரும்பாலான பால் ரீதியிலான தாக்குதல்கள் ஆண்களால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகச் செய்யப்படுபவையேயாகும்.
ஆண்களும் பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிறார்கள்; அவற்றில் பெரும்பாலானவற்றை மற்ற ஆண்களே இழைக்கிறார்கள்.
பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிற பெரும்பாலானவர்களுக்கு அவ்விதமாகத் தாக்குதல் தொடுப்பவர்களைத் தெரியும் அல்லது சமீபத்தில் அவர்களைச் சந்தித்திருக்கிறார்கள்.
பால் ரீதியிலான தாக்குதலின் சில செயல்பாடுகள் குற்றவியல் குற்றச் செயல்களாகவும் இருக்கின்றன.
காவல்துறையினரிடம் தெரிவிப்பது என்பது ஒரு கடினமான முடிவாகவே இருக்க முடியும். நமது நீதி அமைப்பில் உள்ள வரம்புகளும், தடயத்தைச் சேகரிக்கிற முறையும் முரண்பாடானதாக இருக்கலாம்.
பால் ரீதியிலான தாக்குதலை அனுபவித்திருக்கிறவர்கள், வெவ்வேறு விதமான அநேக வழிகளில், சில நேரங்களில் கடுமையான உணர்ச்சிகள் மூலமாகவும், சில நேரங்களில் விலகிச் சென்று விடுவதன் மூலமாகவும் பதிலடி கொடுக்கிறார்கள். தனிநபர்களுக்கு இடையில் ஏற்படுகிற வன்முறையின் காயத்தைப் புரிந்து கொள்வது, அதற்கேற்ற விதத்தில் பதிலளிக்க நமக்கு உதவுகிறது.
பால் ரீதியிலான தாக்குதல் என்பது, சமுதாயத்தில் நிலவுகிற சமநிலையற்ற வலிமைகளைத் துஷ்பிரயோகம் செய்வதேயாகும்.
பெரும்பாலான பால் ரீதியிலான தாக்குதல்கள், காவல்துறையினரிடம் அறிவிக்கப்படுவதில்லை.
பால் ரீதியிலான தாக்குதல் போன்ற தனிநபர்களுக்கு இடையில் ஏற்படுகிற வன்முறை தான் ஒரு நபர் அனுபவிக்க முடிகிற மிக மோசமான காயப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாகும். பாதிக்கப்பட்டவர்கள் / தப்பிப்பிழைத்தவர்கள் சொல்வதை நம்புவதன் மூலமும், அதனைத் தீவிரமான ஒன்றாக எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் அவர்களின் உடனடித் தேவைகளுக்குப் பதிலளிப்பது, அவர்கள் மேற்கொண்டும் காயமடைவதைக் குறைக்க உதவுகிறது. அவர்கள் அடைந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருகையில் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும்; மேலும் அதனை அவர்கள் எதிர்பார்க்கிற விதத்திலும், அவர்களுக்குத் தேவைப்படுகிற நேரத்திலும் அளிப்பது முக்கியமானதாகும்.
பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவருக்கு ஆதரவளிப்பது குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் உங்களுக்கு வேண்டுமென்றால், பால் ரீதியிலான தாக்குதலை அனுபவித்திருக்கிற ஒருவருக்கு எவ்விதம் ஆதரவளிப்பது என்ற பக்கத்தைப் பாருங்கள்.
Developed with: Victorian Centres Against Sexual Assault