To leave this site quickly, click the Quick Exit button below. Learn about Quick Exit button here. If you don’t want your browser history saved, please open incognito browsing mode. Learn about incognito mode here. If you're in immediate danger, please call 000.

தொலைபேசி ஆற்றுதல்

ஒரு டீஐஎஸ் மொழிபெயர்ப்பாளர் கொண்டு தொலைபேசி ஆற்றுதல் சேவையை உபயோகித்தல்

1800RESPECT சேவை, பால் ரீதியிலான தாக்குதல் மற்றும் வீட்டு மற்றும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட, ஆஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும் கிடைக்கிறது. தகுதிபெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆற்றுநர்கள், ஆற்றுதல் சேவை, தகவல்கள் மற்றும் மற்ற சேவைகளை அணுகுவதற்கான உதவி ஆகியவற்றை வழங்குகிறார்கள். இச்சேவை நாளின் 24 மணி நேரங்களும், வாரத்தின் ஏழு நாட்களிலும் கிடைக்கின்றது.

1800RESPECT சேவையைத் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்களுக்கு, 24/7 தொலைபேசி மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி மாற்றுநர்கள் சேவை (டீஐஎஸ் நேஷனல்) இலவசமாகக் கிடைக்கிறது.

இதனை ஏற்பாடு செய்ய:

  • 1800 737 732 என்ற எண்ணில் 1800RESPECT சேவையை அழைத்து, ஒரு மொழி மாற்றுநர் வேண்டுமெனக் கேளுங்கள். அங்குள்ள ஆற்றுநர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார், அல்லது

  • 131 450 என்ற எண்ணில் TIS சேவையை அழைத்து, 1800RESPECT சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டுமென அவர்களிடம் கேளுங்கள்.

ஆன்லைன் ஆற்றுதல்

1800RESPECT ஆன்லைன் ஆற்றுதல் சேவை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

 

உடனடி ஆபத்து எனும் நிலையில், காவல்துறை உதவிக்கு 000 என்ற எண்ணை அழையுங்கள்.

டீடீஒய் அல்லது நேஷனல் ரிலே செர்வீஸை உபயோகித்துஅவசர அழைப்புகளை மேற்கொள்ள, Calls to emergency services என்ற இணைய முகவரியில் பாருங்கள்.

 

TIS

ஒரு டீஐஎஸ் மொழிபெயர்ப்பாளர் கொண்டு தொலைபேசி ஆற்றுதல் சேவையை உபயோகித்தல்

TIS