We’re currently experiencing issues with some calls not connecting to the service. Please use the chat function if your call is not connecting. If you're in immediate danger call 000.

பால் ரீதியிலான தாக்குதல் என்றால் என்ன?

பால் ரீதியிலான தாக்குதலைப் புரிந்து கொள்வது அதற்கேற்ப பதிலளிக்க நமக்கு உதவுகிறது.

Tamil - Your rights and options after a recent sexual assault

Tamil - Your rights and options after a recent sexual assault

1800RESPECT

Tamil - Your rights and options after a recent sexual assault

பால் ரீதியிலான தாக்குதல் என்பது, ஒரு நபரை அசௌகரியமாக, அச்சுறுத்தப்படுவதாக அல்லது பயமுறுத்தப்படுவதாக உணரச்செய்கிற எந்தவொரு பால் ரீதியிலான அல்லது பால் ரீதியில்ஆக்கப்பட்டதோர் செயலேயாகும். அது, ஒரு நபர் விரும்பாதஅல்லது தேர்ந்தெடுக்காததோர் பழக்கவழக்கமேயாகும்.

பால் ரீதியிலான தாக்குதல் என்பது நம்பிக்கைத் துரோகமும், தனது உடலுக்கு என்ன நேர்கிறது என்பதை சொல்வதற்கு ஒவ்வொரு நபருக்கும் உள்ளதோர் உரிமையை மறுக்கும் செயலுமாகும். பால் ரீதியிலான தாக்குதல் என்பது, உரிமையையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதாகும்.

பால் ரீதியிலான தாக்குதலை, வயது நிரம்பியவர்கள் மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள், மற்றும் மற்ற அனைத்துப் பின்னணியங்களிலிருந்து வருகிறவர்களுக்கு எதிராகச் செய்ய முடியும்.

பால் ரீதியிலான தாக்குதல் என்பதை பால் ரீதியிலான துஷ்பிரயோகம் அல்லது பால் ரீதியிலான வன்முறை என்பதாகவும் சொல்ல முடியும். கற்பழிப்பு மற்றும் பால் ரீதியிலான துஷ்பிரயோகம் போன்ற, பால் ரீதியிலான தாக்குதலைக் குறிக்க உபயோகிக்கிற சொற்கள், அன்றாட உரையாடல்களில் உபயோகிக்கும் போது பொதுவான அர்த்தமும், குறிப்பிட்டதோர் பால் ரீதியிலான குற்றச் செயல்களைக் குறிக்க உபயோகிக்கும் போது குறிப்பானதோர் அர்த்தமுமாக இரு அர்த்தத்தையும் கொண்டுள்ளன. இந்த இணையதளத்தில், நாம் இத்தகைய சொற்களைப் பொதுவானதோர் வழியிலேயே உபயோகிக்கிறோம் மேலும் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறோம்.

பால் ரீதியிலான குற்றவியல் குற்றச் செயல் ஒன்று நடைபெற்றிருக்கிறது என்பதாக நீங்கள் நினைத்து, அது குறித்து புகார் தெரிவிக்க விரும்பினால், நீங்கள் அது குறித்து மேற்கொண்டும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் இதனை, உங்கள் பகுதியில் உள்ள பால் ரீதியிலான தாக்குதல் சேவையை [ஆங்கிலத்தில்], காவல்துறையினரை, உங்கள் மருத்துவரை அல்லது தனியார் வழக்கறிஞர் ஒருவரைத் தொடர்பு கொள்வதன் மூலம் செய்யலாம்.  நேரமும் ஒரு காரணியாக இருக்கலாம் மேலும் இச்சேவைகளால் உரிமைகள் மற்றும் கிடைக்கக் கூடிய வழிவகைகள் குறித்த தகவல்களை உங்களுக்கு வழங்க முடியும்.

பால் ரீதியிலான தாக்குதல் என்பது அநேக விதங்களில் நடைபெறுகிறது

பால் ரீதியிலான தாக்குதல் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்வது, ஒரு நண்பரோ, குடும்ப உறுப்பினரோ அல்லது வாடிக்கையாளரோ தாங்கள் அவ்வகையான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக உங்களிடம் தெரிவிக்கும் போது அதற்குத் தக்க விதத்தில் பதிலளிக்க நமக்கு உதவுகிறது. பின்வரும் பட்டியல், பால் ரீதியிலான தாக்குதலுக்கான சில உதாரணங்களைக் கொடுக்கிறது:

  • பால் ரீதியிலான வன்கொடுமை.

  • விரும்பத்தகாத வகையில் தொடுவது அல்லது முத்தமிடுவது.

 

  • வற்புறுத்தி அல்லது கட்டாயப்படுத்திச் செய்கிற பால் ரீதியிலான செயல்பாடுகள் அல்லது பால்-தொடர்பான செயல்பாடுகள், வன்முறை அல்லது வலியை ஈடுபடுத்துகிற செயல்பாடுகள்.
  • ‘ஃப்ளாஷிங்’ போன்று திடீரென்று பால் உறுப்புக்களைக் காண்பித்தல்.
  • வெறித்துப் பார்த்தல்.
  • நீங்கள் ஆடையின்றி இருக்கும் போது அல்லது பால் ரீதியிலான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது உங்களது அனுமதியில்லாமல் ஒருவர் உங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது.
  • உங்கள் ஒப்புதல் இல்லாமல் பால் ரீதியிலான படங்களை இணையத்தில் அஞ்சலிடுவது​
  • காமக்கலைப் படங்களைப் பார்க்க அல்லது காமக்கலையில் ஈடுபட ஒருவர் உங்களைக் கட்டாயப்படுத்துவது அல்லது வற்புறுத்துவது
  • பாலுறவு அல்லது பால் ரீதியிலான செயல்பாடுகளை விருப்பம் போல் அரங்கேற்றுவதற்காக ஒரு நபரின் உணரும் திறனைக் குறைப்பதற்காக அல்லது அதனைச் சீர்குலைப்பதற்காக, மயக்க மருந்து கலந்த பானங்கள் அல்லது போதை மருந்துகள் அல்லது மதுவை உபயோகித்தல்.
  • தூக்கத்தில் இருக்கும், மது மற்றும்/அல்லது மற்ற போதை மருந்துகளினால் பாதிப்படைந்துள்ள ஒருவரோடு பாலுறவு கொள்ளுதல்.
  • வறுபுறுத்துகிற, கட்டாயப்படுத்துகிற அல்லது தவறாக உபயோகிக்கும் பழக்க வழக்கத்தின் ஒரு தோரணையின் ஒரு பகுதியாக, காமநெடி அடிக்கும் அல்லது அனார்த்தமான நகைச்சுவைகள், கதைகளைச் சொல்லுதல் அல்லது பால் ரீதியாக சித்தரித்த படங்களைக் காண்பித்தல்.
  • கற்பழிப்பு (எந்தவொரு புழையிலும் பொருள் எதையும் திணித்தல்).
  • பால் ரீதியிலான செயல்பாடுகள் எதிலும் ஈடுபடச் செய்வதற்காக, ஒரு குழந்தையை அல்லது ஏமாற்றக்கூடிய நபர் ஒருவரை ‘வளர்த்தல்’.
  • குழந்தை ஒன்றுடன் செய்கிற எவ்விதமான பால் ரீதியிலான செயல்.

பால் ரீதியிலான தாக்குதல் குறித்த யதார்த்தங்கள்?

பால் ரீதியிலான தாக்குதல் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான காரியங்கள் இதோ:

  • பெரும்பாலான பால் ரீதியிலான தாக்குதல்கள் ஆண்களால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகச் செய்யப்படுபவையேயாகும்.

  • ஆண்களும் பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிறார்கள்; அவற்றில் பெரும்பாலானவற்றை மற்ற ஆண்களே இழைக்கிறார்கள்.

  • பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிற  பெரும்பாலானவர்களுக்கு அவ்விதமாகத் தாக்குதல் தொடுப்பவர்களைத் தெரியும் அல்லது சமீபத்தில் அவர்களைச் சந்தித்திருக்கிறார்கள்.

  • பால் ரீதியிலான தாக்குதலின் சில செயல்பாடுகள் குற்றவியல் குற்றச் செயல்களாகவும் இருக்கின்றன.

  • காவல்துறையினரிடம் தெரிவிப்பது என்பது ஒரு கடினமான முடிவாகவே இருக்க முடியும். நமது நீதி அமைப்பில் உள்ள வரம்புகளும், தடயத்தைச் சேகரிக்கிற முறையும் முரண்பாடானதாக இருக்கலாம்.

  • பால் ரீதியிலான தாக்குதலை அனுபவித்திருக்கிறவர்கள், வெவ்வேறு விதமான அநேக வழிகளில், சில நேரங்களில் கடுமையான உணர்ச்சிகள் மூலமாகவும், சில நேரங்களில் விலகிச் சென்று விடுவதன் மூலமாகவும் பதிலடி கொடுக்கிறார்கள். தனிநபர்களுக்கு இடையில் ஏற்படுகிற வன்முறையின் காயத்தைப் புரிந்து கொள்வது, அதற்கேற்ற விதத்தில் பதிலளிக்க நமக்கு உதவுகிறது.

  • பால் ரீதியிலான தாக்குதல் என்பது, சமுதாயத்தில் நிலவுகிற சமநிலையற்ற வலிமைகளைத் துஷ்பிரயோகம் செய்வதேயாகும்.

  • பெரும்பாலான பால் ரீதியிலான தாக்குதல்கள், காவல்துறையினரிடம் அறிவிக்கப்படுவதில்லை.

பால் ரீதியிலான தாக்குதலின் தாக்கங்கள்

பால் ரீதியிலான தாக்குதல் போன்ற தனிநபர்களுக்கு இடையில் ஏற்படுகிற வன்முறை தான் ஒரு நபர் அனுபவிக்க முடிகிற மிக மோசமான காயப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாகும். பாதிக்கப்பட்டவர்கள் / தப்பிப்பிழைத்தவர்கள் சொல்வதை நம்புவதன் மூலமும், அதனைத் தீவிரமான ஒன்றாக எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் அவர்களின் உடனடித் தேவைகளுக்குப் பதிலளிப்பது, அவர்கள் மேற்கொண்டும் காயமடைவதைக் குறைக்க உதவுகிறது. அவர்கள் அடைந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருகையில் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும்; மேலும் அதனை அவர்கள் எதிர்பார்க்கிற விதத்திலும், அவர்களுக்குத் தேவைப்படுகிற நேரத்திலும் அளிப்பது முக்கியமானதாகும்.

 

பால் ரீதியாகத் தாக்குதல் அடைந்துள்ள ஒருவருக்கு நான் எவ்விதம் ஆதரளிப்பது?

பால் ரீதியான தாக்குதல் என்பது பொதுவானதே - கிட்டத்தட்ட ஐந்து பெண்களில் ஒருவர் பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிறார். நடைமுறையில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.

 பால் ரீதியாகத் தாக்குதல் அடைந்துள்ள ஒருவருக்கு நான் எவ்விதம் ஆதரளிப்பது?

 

Developed with: Victorian Centres Against Sexual Assault